search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலக்ட்ரானிக் சிகரெட்"

    அமெரிக்காவில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். #ECigarette #Exploded
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் பிரவுன் (வயது 24). இவர் போர்ட் வொர்த் நகரில் உள்ள எலக்ட்ரானிக் சிகரெட் கடைக்கு சென்றார். அங்கு எலக்ட்ரானிக் சிகரெட்டை வாங்கிய அவர் கடைக்கு வெளியே தனது காருக்குள் அமர்ந்து அதனை புகைத்தார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறியது. இதில் அவருக்கு முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. கடை உரிமையாளர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.

    மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த பிரவுனுக்கு திடீர் பக்கவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் பரிதாபமாக இறந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறியதால்தான் பிரவுன் உயிர் இழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது.

    அமெரிக்காவில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து நிகழ்ந்த 2 மரணம் இதுவாகும். கடந்த ஆண்டு மே மாதம் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த 38 வயது ஆண் ஒருவர் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து பலியானது குறிப்பிடத்தக்கது. 
    மக்களின் உடல்நலன் கருதி எலக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தமிழக சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அறிவித்துள்ளார். #ElectronicCigarette
    சென்னை:

    பீடி, சிகரெட்க்குகளுக்கு மாற்றாக எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்தன. மால்களிலும், ஆன்லைன் மூலமாகவும் இந்த சிகரெட்டுகளை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த சிகரெட்டில் நிக்கோடினின் அளவு அதிகளவில் இருப்பதாக பல புகார்கள் எழுந்தன.

    இந்நிலையில், இந்த எலக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட உள்ளது. மக்களின் உடல்நலன் கருதி தமிழகத்தில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்குத் தடை விதிப்பதாக தமிழக சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அறிவித்துள்ளார்.
    ×